ThingsGuideIndian Education BlogThingsGuide
ThingsGuideThingsGuideThingsGuide

Govt Jobs 2016

Government Job Hunter Provides Valuable Information about Government Jobs 2016,Upcoming Government Jobs,Exam Results,Current Affairs 2016.

Monday, 23 June 2014

ஐ.பி.பி.எஸ்.,சின் தேர்வு அறிவிப்பு

இன்ஸ்டியூட் ஆப் பேங்கிங் பெர்சானல் செலக்சன் எனப்படும் ஐ.பி.பி.எஸ்., அமைப்பு பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களை கடந்த சில ஆண்டுகளாக நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். தற்போது இந்த அமைப்பின் சார்பாக ரீஜனல் ரூரல் பேங்க்ஸ் எனப்படும் ஆர்.ஆர்., க்களில் காலியாக உள்ள உதவியாளர், அதிகாரி போன்ற காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள்: ஐ.பி.பி.எஸ்., நடத்தும் இந்த எழுத்துத் தேர்வின் மூலமாக மல்டிபர்பஸ் ஆபிஸ் அஸிஸ்டென்ட், ஸ்கேல் 1 அதிகாரி, ஸ்கேல் 2 பிரிவினைச் சார்ந்த ஜெனரல் பேங்கிங் அதிகாரி, ஸ்கேல் 2 பிரிவைச் சார்ந்த ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பிரிவில் உள்ள ஐ.டி., சி.ஏ., லா, டிரெஷரி மேனேஜர், மார்கெடிங் ஆபிசர், அக்ரிகல்சுரல் ஆபிசர் போன்ற காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதி: மல்டிபர்பஸ் அஸிஸ்டென்ட், ஸ்கேல் 1 ஆபிசர் ஆகிய பிரிவுகளுக்கு 18 வயது முதல் 28 வயது உடையவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மல்டிபர்பஸ் அஸிஸ்டென்ட், ஸ்கேல் 1 மற்றும் ஸ்கேல் 2 அதிகாரிக்கு ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பதவிக்கு உரிய பிரிவில் சிறப்பு தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.600/-ஐ இந்த தேர்வுக்கான கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர் ரூ.100/- செலுத்த வேண்டியிருக்கும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 09.07.2014
இணையதள முகவரிhttp://ibps.in/career_pdf/CWE_Advertisement_RRBs_Phase_III.pdf

1 comment:

  1. If possible provide download links for sample question papers. That will be helpful. :)

    ReplyDelete