ThingsGuideIndian Education BlogThingsGuide
ThingsGuideThingsGuideThingsGuide

Govt Jobs 2016

Government Job Hunter Provides Valuable Information about Government Jobs 2016,Upcoming Government Jobs,Exam Results,Current Affairs 2016.

Wednesday, 18 June 2014

ஒரே நாளில் 4 தேர்வுகள்: குரூப்-2 தேதியை மாற்ற டி.என்.பி.எஸ்.சி மறுப்பு!

ஒரே நாளில் 4 அரசு தேர்வுகள் நடப்பதால் எதில் பங்குகொள்வது என விண்ணப்பதாரர்கள் குழம்பிக் கொண்டிருக்கையில்,  குரூப்-2 தேர்வின் தேதியை மாற்ற முடியாது என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி சார்பில் குரூப் 2 தேர்வு வரும் 29ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அன்றைய தினம் மத்திய உளத்துறையில் இளநிலை உளவு அதிகாரி பதவிக்கும், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பதவிக்கும், தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வும் நடத்தப்படவுள்ளன.
இந்த தேர்வுகளுக்கு ஏராளமான பட்டதாரிகள், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் என லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். நான்கு தேர்வுகளும் ஒரே நாளில் நடப்பதால் எந்த தேர்வில் பங்குகொள்வது என்ற கடும் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர் பட்டதாரிகள்.

இதனால் டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்திருந்தார்கள். ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு டி.என்.பி.எஸ்.சி. செவிசாய்க்கவில்லை. அதோடு குரூப் 2 தேர்வு தேதியை மாற்ற முடியாது என்றும் அறிவித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஒரே ஒரு தேர்வில் மட்டும் பங்கேற்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment