Pages - Menu

Wednesday, 9 March 2016

மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு பணிகள் ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வு அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்படும் குருப் ‘பி’ மற்றும் குருப் ‘சி’ காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 8 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் தேர்வுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்:


Assistant Section Officer, Assistant, Inspector of Income tax, Inspector (Central Excise), Inspector (Preventive Officer), Inspector (Examiner), Assistant Enforcement Officer, Sub-inspector, Inspector of Posts, Divisional Accountant, Statistical Investigator Grade II, Inspector (Narcotics), Sub-inspector (National Investigation Agency), Assistant Audit Officer, Auditor, Accountant, Junior Accountant, Senior Secretariat Assistant, Tax Assistant, Compiler, Sub-inspector.

கல்வித் தகுதி:

1. Assistant Audit Officer:


ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் CA/ Cost - Management Accountant தகுதி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

2. Statistical Investigator Grade II:

குறைந்தது 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2வில் கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

3. Compiler:

Economics/ Statistics/ Mathematics ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம்.

மேற்குறிப்பிட்ட 3 பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டம்.


வயது வரம்பு:

Assistant Section Officer (Central Secretariat Service), Sub-Inspector (CBI) ஆகிய பணிகளுக்கு 20 லிருந்து 30க்குள்.

Assistant Enforcement Officer, Sub-Inspector (NIA) Assistant Audit Officer ஆகிய பணிகளுக்கு 18 முதல் 30க்குள்.

Assistant, Inspector of Incometax, Central Excise Inspector, Inspector (Preventive Officer), Divisional Accountant உள்ளிட்ட பணிகளுக்கு 18 முதல் 27க்குள்.

Tax Assistant பணிக்கு 20 முதல் 27க்குள்.

1.8.2016 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர், அரசு ஊழியர்கள், விதவைகள், விவாகரத்தான பெண்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.


சம்பளம்:

குருப் ‘பி’ பணிகளுக்கு ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4200/ 4,600/ 4,800/ 5,400.

குருப் ‘சி’ பணிகளுக்கு ரூ.5,200 - 20,2000 மற்றும் தர ஊதியம் ரூ.1800/ 1900/ 2000/ 2400/ 2800.

தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க 3 கட்டங்களாக Graduate Level Examination நடத்தப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வில் General Intelligence, General Awareness, Quantitive Aptitude, English Language ஆகிய பாடங்களில் Objective Type வினாக்கள் கேட்கப்படும். மூன்றாம் கட்டத் தேர்வில் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன், ஆங்கில மொழி புலமையை பரிசோதிக்கும் வகையில் தேர்வுகள் நடைபெறும்.


தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.


விண்ணப்ப கட்டணம்:


ரூ.100. இதை ஸ்டேட் வங்கி செலானை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


பிரின்ட் அவுட்டை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம், தேர்வு மைய முகவரி ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வுக்கான அனுமதி கடிதத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.

தேர்வு நடைபெறும் நாட்கள்: 8.5.2016 மற்றும் 22.5.2016.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.3.2016.

No comments:

Post a Comment