Pages - Menu

Wednesday, 29 October 2014

சென்னையில் 485 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் 485 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் பணியாளர்களை தேர்ந்து எடுப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சென்னை மாவட்டத்தில் கீழ்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் விவரம்: 

அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் - 151 
குறு அங்கன்வாடி பணியாளர்பணியிடங்கள் - 36 
அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் - 298 

வயது: 

அங்கன்வாடி பணியாளர் - 25-35 வயது 
குறு அங்கன்வாடி பணியாளர் - 25-35 வயது
அங்கன்வாடி உதவியாளர் - 20-40 வயது 

கல்வித்தகுதி: 

அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர்கள்- பத்தாம் வகுப்பு தேர்ச்சி 

அங்கன்வாடி உதவியாளர் - தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

காலியாக உள்ள மையங்கள் மற்றும் இன சுழற்சி குறித்த விவரங்கள் அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் வெளிப்படுத்தப்படும். தகுதி வாய்ந்த உள்ளூர் பெண் நபர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு நவம்பர் 11-ந் தேதி மாலை 5 மணி வரை வந்து சேரலாம். இதுகுறித்து விவரம் வேண்டுவோர் அந்தந்த பகுதியிலுள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரியை அணுகலாம். 

இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment